நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த ஏ.கே ராஜன்.!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து இது தொடர்பாக அறிக்கையை தமிழக அரசுக்குத் தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைத்தார். அதன்படி அந்தக் குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வந்தனர். 

மேலும், பொதுமக்களிடமிருந்து நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக கருத்துக்களை கேட்டு பெற்றனர். பொதுமக்களும் இ-மெயில் மூலம் நீட் தேர்வின் தாக்கம் குறித்து தங்கள் கருத்துக்களை அனுப்பினார்.  இதையடுத்து, நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவினர் தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நீதிபதி ராஜன் சமர்ப்பித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rk rajan committee submitted neet statement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->