சத்தமில்லாமல் நீக்கப்பட்ட பாட பகுதி.! தமிழாசிரியர்களும், கல்வியாளர்களும் கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறைவாழ்த்து நீக்கம்: தமிழாசிரியர்களும், கல்வியாளர்கள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர். மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்.

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் பள்ளிக் கல்வி துறையில்  14 ஆண்டுகளுக்கு பிறகு  பாடத்திட்டத்தை மாற்ற முடிவு எடுத்தது.
புதிய பாடத்திட்டத்தினை வடிவமைக்க  பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த உதயசந்திரன் வழிகாட்டுதலின்படி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில். 30  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான தமிழாசிரியர்களை கொண்டு இந்த புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது 

இதில் முதல்கட்டமாக புதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு  அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் மீதமுள்ள2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு  பாடத்திட்டம் மாற்றப்பட்ட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தாலும் காவி நிறத்தில் இடம்பெற்ற பாரதியார் படம் சில சர்ச்சைகளும் வந்தன. இதை தொடர்ந்து புதியபாட திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறைவாழ்த்து நீக்கப்பட்டுள்ளதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

முந்தைய பாடத்திட்டத்தில் தமிழ்புத்தகங்களில் தொடக்கமாக இறைவாழ்த்து இடம்பெற்றிருக்கும். அதன்பிறகு நாட்டுப்பண்  மற்றும் மொழி வாழ்த்து இருக்கும். இறை வாழ்த்து புதிய தமிழ் பாடத்திட்டத்தில்  நீக்கப்பட்டுள்ளது. மொழி வாழ்த்து மட்டுமே உள்ளது. பாடத்திட்டக்குழு இதை நீக்க வேண்டிய அவசியம் என கல்வி எழுந்துள்ளது. இறை வாழ்த்து தனிப்பட்ட எந்த மதத்தையும் போற்றவில்லை. இவையெல்லாம் மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்கும் கருத்துகளைத்தான் குறிக்கிறது. எனவே தமிழ் பாடபுத்தகத்தில் மீண்டும் இறை வாழ்த்து சேர்க்கப்பட வேண்டும் என்று  தமிழாசிரியர் ஜெய்னுலாபிதீன் கூறியுள்ளார்.

இதற்கு முன் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இறைவாழ்த்து பாடல்கள் எல்லாம் பக்தியை தீவிரமாக வலியுறுத்தபடவில்லை. மனிதம், நம்பிக்கை தரும் தாயுமானவர், வள்ளலார் போன்றோரின் பாடல்களே இடம்பெற்றது. மேலும், நல்லொழுக்கம் போன்ற கதைகளில் இருந்து விலகியுள்ள இப்போதுள்ள குழந்தைகளுக்கு  இறைவாழ்த்தின் மூலம் நல்ல பழக்கங்களை கற்றுகொள்ள முடியும் என்று 
எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் கூறிஉள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

removing the song in the new course program. the teachers and the academics are condemned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->