விடியல் எங்கே? தமிழகத்தில் கொரோனா பிணவறையில், உறவினர்களே உடலை தேடி அலையும் அவலம்!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை தேடி, இறந்தவரின் உறவினர்கள் பிணவறையில் தேடி அலைந்த பரிதாப சம்பவம் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடந்துள்ளது. இறுதியாக உடலை கண்டுபிடித்த உறவினர்களே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்திருக்கிறது. 

தேனி மாவட்டம் நல்ல கருப்பன் பட்டி எனும்  கிராமத்தைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி.  இவருக்கு காய்ச்சல் ஏற்படவே கடந்த 30-ஆம் தேதி, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள். மேல் சிகிச்சைக்காக தேனி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கே சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா தொற்றின் பாதிப்பில்  திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவர், மே 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சடலத்தை பெற வந்துள்ளனர். உடல்,  பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்து, உடலை எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சொல்லக்கூட எவரும்  இல்லை. 

'உடலை எவ்வாறு எடுத்துச் செல்வது’ என உறவினர்கள் கேட்ட போது, ‛நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிணவறைக்கு சென்ற உறவினர்கள், பேக் செய்யப்பட்டிருந்த கொரோனா சடலங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து, இறுதியில் தண்டபாணியின் உடலை கண்டுபிடித்துள்ளனர். 

உடலை தேடிய போது, எந்த பாதுகாப்பு உபகரணங்களும், கவச உடைகளும் இல்லாமல் உறவினர்கள் செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. பின்னர் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்று, அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். பொதுவாகவே கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பல விதிமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மொத்த பாதுகாப்பு விதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. 

இந்த அவல நிலை பாலதண்டபாணி உடலுக்கு மட்டுமில்லை, அங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உடலுக்கும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சம் அனைத்து உடல்களையும் பிரிக்காத வகையில், உடல்களை எளிதில் அடையாளம் காணவாவது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிணங்களுக்கான விடியல் எப்போது? என்ற கேள்வியை நாம் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. மெத்தனப்போக்கை கைவிட்டு, உடல்களை முறையாக அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relatives search body of Covid patient in mortuary at Theni GH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->