கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15000 பணமா.? - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியால் வீட்டில் வருமானம் இன்றி இருக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என நேற்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ration card holders 15000 case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->