சாக்லேட்டுக்கு பதில் எலி மருந்து.,பலியான குழந்தை.,பெற்றோர்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தை தவறுதலாக எலி மருந்து சாப்பிட்டு  உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 வேலூரில் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் தாமரைக் குட்டை என்னும் இடத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ஜெயபிரகாஷ். இவரது மனைவி பாரதி.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 2 வயதில் தேவிஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

கணவன் மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.

செங்கல் சூளைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில், எலித்தொல்லைகாக வைக்கப்பட்டிருந்த எலி மருந்தினை தேவிஸ் தவறுதலாக சாப்பிட்டு, பின் சிறிது நேரத்தில் மயக்கமானார்.

இதை கண்ட குழந்தையின் பெற்றோர் இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை தேவிஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குழந்தை தேவிஸ் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rat medicine baby dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->