ராணிப்பேட்டை || காவலர் பணிக்கு தேர்வான மூன்று சகோதரிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான ஏழு மாத அடிப்படை பயிற்சி நிறைவு பெற்றதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள்களான பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். 

இவர்களில் பிரீத்திக்கு மட்டும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். 

மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் தெரிவித்ததாவது:- ''எனது மனைவி ஷகிலா இறந்த பிறகு மகள்கள் மூன்று பேரையும், மகன் கார்த்திகேயனையும் நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன். 

நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை. இதனால் இருக்கின்ற ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது மூன்று மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். எனது மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 

இதையடுத்து, மூத்த மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மற்ற இருவரும் திருமணமாகாத நிலையில் காவல் பணிக்கு சகோதரிகள் மூன்று பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர். ''எனக்கு கிடைக்காத இந்த காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 

எனது மகள்கள் மூன்று பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள். மூத்த மகளும், மூன்றாவது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் படித்தார். 
 
மூன்று மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள். இதற்கான ஓட்டப்பயிற்சியை எனது விவசாய நிலத்திலேயே மூன்று பேரும் எடுத்தார்கள். அவர்களின் கடும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது'' எனது மகள்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு எனது மருமகன் ராஜூவ்காந்தி தான் காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சகோதரிகள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வாகி அதற்கான பயிற்சியையும்  முடித்துள்ளதை அந்த கிராம மக்கள் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipettai Three sisters selected for guard duty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->