போலிச்சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணி.. "தைரியமேரி நெஞ்சினி"யின் செயல்.! சஸ்பெண்ட் செய்து உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


போலிச்சான்றிதழ் கொடுத்து படித்து, பள்ளியில் வேலைக்கு சேர்ந்த ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தைரியமேரி நெஞ்சினியின் தைரிய செயல் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் தைரியமேரி நெஞ்சினி. இவர் அரசு நிதிஉதவி பெறும் சி.எஸ்.ஐ பிரைமரி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவரின் கல்விச்சான்றிதழை பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது. 

இதன்போது, தைரியமேரி நெஞ்சினியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போலியாக இருப்பது உறுதியானது. இதனால் சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அவரது அசல் சான்றிதழை தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும், அவரது சான்றிதழ் அரசால் வழங்கப்பட்ட அசல் சான்றிதழா? எனவும் சோதனை நடந்துள்ளது. 

சோதனையின் முடிவில், பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தைரியமேரி நெஞ்சினி, மனதில் தைரியத்தை வரவழைத்து ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து படிக்க மதிப்பெண் பட்டியலை திருத்தி இருக்கிறார். அதிக மதிப்பெண் பெற்றது போல சான்றிதழை தயாரித்து, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். 

பின்னர், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த விஷயம் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியவரவே, அவர் விசாரணை மேற்கொண்டு போலிச்சான்றிதழ் கொடுத்து பள்ளியில் சேர்ந்த தைரியமேரி நெஞ்சினியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Arakonam Govt Aided CSI School Teacher Thairiyamary Nenjini Using Fake Certificate for Job she Dismiss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->