வாக்காளர் பட்டியல் தவறுக்காக தேர்தலை தள்ளிவைக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலில் இருக்கும் தவறுக்காக தேர்தலை தள்ளிவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகேயிருக்கும் புதூர் கிராமத்தில், 110 வாக்காளர்களின் பெயர் தவறுதலாக இணைக்கப்பட்டது. இதனால் அதில் உள்ள தவறை நீக்க வேண்டும். தவறுகளை நீக்கி புதிய பட்டியல் வெளியிடும் வரை வகை உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரவே, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கையில், சம்பந்தப்பட்ட 110 பேர் மற்றொரு வார்டில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க இயலாது என்ற நிலை இல்லை. ஆகையால் தேர்தலை நிறுத்த இயலாது என வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தீர்ப்பளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Arakkonam Ward Members Name Local Body Election Issue Chennai Court Judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->