மகா சிவராத்திரி உற்சவம் - இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத சுவாமி கோவில் நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணியளவில் திறக்கப்படும் கோவில் நடை, பகல் மற்றும் இரவு என 12 ஆம் தேதி மதியம் வரை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5 ஆவது நாளாகிய நேற்று இரவு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகள் உலா வந்தார். 

ஆறாவது நாளாகிய இன்று இரவு 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா தர இருக்கிறார். ஏழாவது நாளாகிய நாளை மாலை 6 மணியளவில் அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் உலா வருகிறார். 

இதனையடுத்து, வரும் 11 ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று இரவு அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளித்தேரில் உலா வர இருக்கிறார். அன்றைய அதிகாலை 4 மணியளவில் திறக்கப்படும் கோவில் நடை, பகல் மற்றும் இரவு வரை திறந்து இருக்கும். மறுநாள் (12 ஆம் தேதி) மதியம் 1 மணியளவில் நடை சாத்தப்படும். 

12 ஆம் தேதி காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. சிவராத்திரி மற்றும் தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தனபால் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் ஸ்ரீ இராமநாதசுவாமியின் தரிசனம் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram Sri Ramanatha Swamy Temple Committee Announce Maha Shivratri Plan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->