ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கடலில் ஏற்பட்ட விபரீதம் - மீனவர்கள் வேதனை..! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். சமீப காலத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த பொழுது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த மீன்பிடி பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தில் திரும்பி வந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராமேஸ்வர மீனவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramehwaram fisher mans worried


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->