சொந்த இருசக்கர வாகனத்தில் குப்பை வண்டி இணைப்பு - தூய்மை பணியாளரின் அற்புத செயல்! - Seithipunal
Seithipunal


ராஜபாளையம் நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றும் ராமர் என்பவர் தனது சொந்த இருசக்கர வாகனத்தில் பார வண்டியை இணைத்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரை நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

ராஜபாளையம் நகராட்சியில் 141 நிரந்தர துாய்மை பணியாளர்களும், 300 ஒப்பந்த ஊழியர்களும் பணியில் உள்ளனர். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் அளிக்கப்பட்ட 70 பேட்டரி குப்பை வண்டிகளில் தற்போது 25 மட்டும் பயன்பாட்டில் உள்ளது.

மீதமுள்ள வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், ராஜபாளையம் நகராட்சியில நிரந்தர ஊழியராக உள்ள ராமர் என்பவர், ரூ.20 ஆயிரம் செலவில் ட்ரை சைக்கிள் பாரம் ஏற்ற பயன்படுத்தப்படும் பின்பகுதியை தனது இருசக்கர வாகனத்தின் பின் இணைத்து குப்பைகளை அகற்றி வருகிறார்.

ராமர் தினமும் தன்னுடைய வாகனத்தில் குப்பைகளை ஏற்றி முடித்த பின்னர், ஸ்பேனர் கொண்டு பார வண்டியை கழட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறார். இவரை நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramar engaged cleanliness work own two-wheeler


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->