இன்ஸ்டாவில் பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கில் சம்பாரித்த கொடூரம்.. விசாரணையில் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்தியேக எண்ணிற்கு பெண் ஒருவரின் அலைபேசியில் இருந்து புகார் வந்துள்ளது. இதுகுறித்த புகாரில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்து, இதனை போன்று தங்களிடம் பல படங்கள் இருப்பதாகவும், இதனை வெளியிடாமல் இருக்க தனது தோழர்களுடன் தோழியாக பழக வேண்டும் என்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவன் மிரட்டியுள்ளான். 

அவனது மிரட்டலுக்கு பயந்து போன மாணவி இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில், ஒரு கட்டத்தில் பெண்ணை ஆடை இல்லாமல் வீடியோவில் தோன்றும் படி வற்புறுத்தியுள்ளனர். இவர்களிடம் சிக்கிய பல பெண்களின் வீடியோவையும் அனுப்பி மிரட்டிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7 லட்சம் வரை பறித்துள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வரன் குமாரின் உத்தரவின் பேரில், இதுகுறித்து சைபர் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

சைபர் கிரைம் காவல் துறையினர், காமக் கூட்டம் குறித்து தகவலை சேகரித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இன்ஸ்டாகிராமில் இதனைப் போன்று பல போலி கணக்கு தொடங்கி பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும், இந்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியாமல் உள்ளது. 

இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது மைதீன் என்பவன் பிளாக்மெயில் கும்பலுக்கு தலைவனாக இருந்த நிலையில், இவன் ஜெர்மனி நாட்டில் தங்கி பயின்று வருவதும், ராமநாதபுரத்தில் இருப்பது போல போலியாக கணக்கு மூலமாக பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

இவனது நண்பர்களான சென்னையைச் சார்ந்த பாசித் அலி, புதுச்சேரியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹீம், நெல்லையைச் சார்ந்த ஜாஸம் கனி, கீழக்கரையை சேர்ந்த பைசூல், நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது காசிம் ஆகியோரும் பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. 

இவன்களிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நிலையில், இவர்கள் அனைவரும் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதில் முதற்கட்டமாக நெல்லை ஜாஸம் கனி மற்றும் கீழக்கரையை சார்ந்த முகமது மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், முகமது மைதீன் குறித்த தகவல்களையும் அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இது போன்று யாரேனும் மிரட்டினால் காவல் கண்காணிப்பாளர் அலைபேசி எண் 94 899  19 722 என்ற பிரத்தியேக எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram sexual torture gang arrest police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->