இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசாமி கோவில் இந்த வாரம் 2 நாட்கள் மட்டுமே அனுமதி.!! - Seithipunal
Seithipunal


இந்த வாரத்தில் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசாமி கோவில் பக்தர்களின் தரிசனத்திற்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததும், குடும்ப நலனுக்காக பூஜைகள் செய்தும் பக்தர்கள் வழிபாடு செய்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில், பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாளான 6 ஆம் தேதியன்று மகாளய அமாவாசை தினம் வரவிருக்கும் நிலையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட திட்டமிட்டு இருந்தனர். இந்த காலங்களில் பக்தர்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால், 5 ஆம் தேதி மதுரம் 6 ஆம் தேதியில் பக்தர்கள் கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருக்கும் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதி லிங்கமாக கருட்படும் இராமேஸ்வரம் காசிக்கு நிரகரான புண்ணிய தலமாக கருதப்படுகிறது. தற்போது, கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள தடையால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், இராமேஸ்வரம் கோவில், கடற்கரை பகுதிகள் வெறிசோடி காணப்பட்டது. இன்று பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதி கிடையாது. 

வியாழக்கிழமை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனுமதி மறுக்கப்படும். இதனால் இந்த வாரத்தில் உள்ள 7 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக இராமேஸ்வரம் கோவில் திறக்கப்படுகிறது. கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் முன்னிலையில் மட்டும் பூஜைகள் நடைபெறும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Rameswaram Sri Ramanathasamy Temple Peoples Visit This Week 2 Days Only 4 Oct 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->