முதலில் கடற்கரை சுத்தம்.. பின்னர் இலவச பயிற்சி.. அசத்தும் இராமேஸ்வரம் குவஸ்ட் அகாடமி.! - Seithipunal
Seithipunal


மீனவச் சிறுவர்கள் உதவியுடன் கடற்கரையை சுத்தம் செய்த பின்னர், அவர்களுக்கு கட்டணமின்றி கடல் விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கும் தனியார் நிறுவனம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. 

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரியவகை கடல் உயிரினங்கள் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளால் அழிவை சந்திக்கிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளை பயிற்சி அளிக்கும் குவஸ்ட் அகாடமி (Quest Acadamy) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  

இந்த நிறுவனம் சார்பாக கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தூய்மைப் பணியில் தங்களுக்கு கைகொடுக்கும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு இலவசமாக கடல் விளையாட்டுகளையும் கற்றுக் கொடுத்து வருகிறது. 

சுமார் அரை மணி நேரம் கடற்கரையை சுத்தம் செய்தால், அடுத்த ஒரு மணி நேரம் அந்த சிறுவர்கள் உற்சாகமாக கடல் விளையாட்டுகளை கற்றுக்கொள்கின்றனர். மேலும், கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதனை பராமரிக்க வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்து உணர்த்தினால், ஆரோக்கியமான தலைமுறையை உருவாகும் என்று அந்த அகாடமி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Rameswaram Quest Academy make Clean Sea and Teach Sea Games 12 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->