வேட்பு மனுதாக்கல் செய்ய வரும்போதே சம்பவம்.. திமுக இருதரப்பு கோஷ்டி சண்டை.. இருவருக்கு வெட்டு.! - Seithipunal
Seithipunal


முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்ற நிலையில், இரு தரப்பு திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆதரவாளர்களும், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளரின் ஆதரவாளர்களும் இடையே முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இராமநாதபுரம் முதுகுளத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கண்ணன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, இந்த இருதரப்பும் உடன் சென்றுள்ளது.  இதன்போது, இவர்களுக்கு இடையே இருந்த முன் விரோதம் காரணமாக, முன் பகையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, இருதரப்பும் மாறிமாறி வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், திடீரென மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் பாலமுருகன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த நிலையில், காயமடைந்த இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், கூடுதல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் முதுகுளத்தூர் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Mudukulathur DMK Gang Fight When Come Nominate TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->