11 மணிக்கு மேலே போயி மணல் அள்ளுனா மட்டும் விட்டுடுவோமா?.. அசால்ட் காட்டிய டி.எஸ்.பி.! - Seithipunal
Seithipunal


கமுதியில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிக் கொண்டு தப்பிக்க முயன்ற டிராக்டரை காவல்துறை டி.எஸ்.பி விரட்டிப்பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலமாக மணல் திருடப்படுவதாக கமுதி டி.எஸ்.பி பிரசன்னாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கோவிலாங்குளம் அருகேயுள்ள காணிக்கூர் பகுதியில் டி.எஸ்.பி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், அவரது வாகனத்தை கண்டதும் டிராக்டர் மணலுடன் தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில், வறண்டு கிடந்த வயலுக்குள் டிராக்டரை இறக்கிய ஓட்டுநர் தப்பி செல்ல டிராக்டரை வேகமாக இயக்கியுள்ளனர். டிராக்டரில் இருந்து ஆற்று மணலை வயல்வெளியில் கொட்டி விட்டுச் சென்ற நிலையில், டி.எஸ்.பி பிரசன்னா வாகன ஓட்டுனர் டிராக்டர் ஓட்டுனரை விரட்டி பிடித்தார். 

டி.எஸ்.பி பிரசன்னா நடத்திய விசாரணையில், தனக்கு மணல் அள்ளிச் செல்வது மட்டும்தான் தெரியும் என்றும், எங்கு அதனை கொட்டவேண்டும் என்பதெல்லாம் உரிமையாளருக்கு மட்டும்தான் தெரியும் என்றும் கூறியுள்ளார். 

அவர் கொடுத்த தகவலின் பேரில் முனீஸ்வரன் என்ற ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். மேலும், முனீஸ்வரன் என்பவரிடம் இருந்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பதினோரு மணிக்கு மேல் மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டி, டிராக்டருடன் செல்லுங்கள் என்று யாரோ ஒருவர் பேச்சுக்காக பேசியதை நம்பி சென்றால் ஆப்புகள் எப்படியெல்லாம் வாங்க வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Kamudi DSP Prasanna Arrest Sand Smuggling Tractor and Driver 29 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->