அரசு வேலை என்று கூறி மோசடி.. நடிகைகளுடன் ஜல்சா.. கைதான போலி கும்பலின் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புலிக்காரதெரு பகுதியை சார்ந்தவர் தனராஜ். இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்கள் இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், இவர்களது மகனின் பெயர் சைமன். இவர் ஆந்திராவில் மருத்துவ கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். டெய்சிக்கு சென்னையில் உள்ள சுகாதாரத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் ஜார்ஜ் பிலிப் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். 

ஜார்ஜ் தனக்கு சென்னையில் டி.என்.பி.எஸ்.சியில் பணியாற்றி வரும் பிரகாஷ் மற்றும் நவாப்பன் ஆகியோர் நன்றாக தெரியும். இவர் மூலமாக பலருக்கும் அரசு பணி வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய டெய்சியும் தனது மகளின் கணவர் மற்றும் சகோதரியின் மகன், உறவினர் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர கூறி தெரிவித்துள்ளார். 

ஜார்ஜ் தலா ரூ.5 இலட்சம் என ரூ.15 இலட்சம் மற்றும் கல்வி சான்றிதழின் நகல் ஆகியவற்றை கேட்டுள்ளார். கேட்டபடி பணம் மற்றும் சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொடுத்த நிலையில், அரசு அதிகாரிகள் காரில் வருவது போல நவாப்பன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதனால் அதீத நம்பிக்கை ஏற்பட்டு, பணத்தை உடனடியாக வழங்கியுள்ளனர்.

பணி நியமன ஆணை குறித்து கேட்ட சமயத்தில், மூவரும் காரில் தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டெய்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு, எஸ்.பி பட்டினம் பகுதியில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் நவாப்பன் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சார்ந்தவர்கள் என்பதும், அரசு அதிகாரிகளின் பெயர்களில் அறிமுகம் செய்து கொண்ட இருவரும், தங்களை உயர் அதிகாரிகள் என்று காண்பித்து போலியான அடையாள அட்டைகள் மற்றும் விசிட்டிங் கார்டுகள் போன்றவை தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. 

இதுமட்டுமல்லாது மோசடி செய்த பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்ததும், இவர்களது அலைபேசியில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படத்தில் 10 க்கும் மேற்பட்ட நடிகையுடன் எடுத்த புகைப்படம் இருந்துள்ளது. இவர்கள் இருவரிடமும் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram fraud govt work gang arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->