இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகள் அடுத்தடுத்து மரணம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,059 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 364 பேர் பலியாகினர். தமிழகத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மாவட்ட அளவிலும் பல மாவட்டங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான வகையில் இருக்கிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று 192 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,691 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 2,584 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நேற்று இரவு 20 பேர் அடுத்தடுத்து பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  

மருத்துவமனையில் அனுமதியாகிருந்த 15 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 20 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram District Hospital 20 Patients Continuously Died on Yesterday 19 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->