ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அது போன்ற பண்டிகைகளுக்கு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram District Collector orders educational institutions to function today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->