எலிமருந்தை பற்பசையாக எண்ணிய 5 சிறுமிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தை சார்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள்கள் ஆர்த்தி (வயது 11), கீர்த்தி (வயது 12). இதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. 

இவரது மகள் சுபிக்ஷா. உடையப்பன் என்பவரின் மகள் முத்துபாண்டீஸ்வரி (வயது 13), ராமதாஸ் என்பவரின் மகள் அங்காள ஈஸ்வரி. இவர்களின் இல்லங்கள் அருகருகே உள்ள நிலையில், சிறுமிகள் ஐவரும் ஒன்றாக விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், அங்கு கீழே இருந்த எலி மருந்து பேஸ்ட்டை, பற்பசை என்று எண்ணிய ஐவரும், அதனை வைத்து பல்லை துலக்கியுள்ளனர். இதனையடுத்து ஐவரும் அடுத்தடுத்து மயக்கமடைந்துள்ளனர்.

இவர்களை கண்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர், ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சிறுவர்களுக்கு பெற்றோர்கள் எலி மருந்து மற்றும் பற்பசை தொடர்பான விபரத்தை தெளிவாக கூறுவது அல்லது விஷ பொருட்களை குழந்தைகள் கைகளுக்கு எட்டாமல் வைத்திருப்பது நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram child using tooth paste Mouse killer admit hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->