சிறுகச்சிறுக சேர்த்த நகையை மொத்தமாக தூக்கி ஓடிய நகை மதிப்பீட்டாளர்.. கண்ணீரில் விவசாயிகள்..!! - Seithipunal
Seithipunal


இராமநாதமபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மீஞ்சூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 40 வருடத்திற்கு மேலாக கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் விவசாயம் அதிகளவு நடைபெறுவதால், விவசாயிகள் ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து விவசாய கடன்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நகை கணக்கீட்டாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் என்பவர், கடந்த 1 மாதமாக விவசாயிகள் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை திருப்ப வந்தவர்களிடம், நகையை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வங்கியில் அடகு வைத்த மக்கள், இது குறித்து வங்கியின் மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளனர். 

இதுகுறித்த புகாருக்கு பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அடகில் இருந்த மக்களின் நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி நிர்வாகம் சார்பாக மணிகண்டனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கியின் தரப்பில் நகையை மீண்டும் ஒப்படைக்க 1 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது.

இந்த விசயத்திற்கு உடன்பட மறுப்பு தெரிவித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவே, காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரூ.44 இலட்சம் மதிப்புள்ள 300 சவரன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை காவல் துறையினர் தேட தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Bank Jewelry Accountant cheat former


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->