இராணுவ வீரர் பழனியின், 10 வயது மகன் நெகிழ்ச்சி பேச்சு...!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இந்திய - சீன இராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில், 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடுக்காலூர் பகுதியை சார்ந்த இராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். 

இவரது உடல் கடந்த 18 ஆம் தேதியன்று இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பழனிக்கு வானதி தேவி என்ற மனைவி இருக்கிறார். பழனி - வானதி தேவிக்கும் பிரசன்னா (வயது 10) என்ற மகனும், திவ்யா (வயது 8) என்ற மகளும் உள்ளனர்.  

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் பழனியின் மகன் பிரசன்னா, நான் தற்போது ஆறாம் வகுப்பு பயின்று வருகிறேன். சிறுவயதில் இருந்து எனக்கும் தந்தையை போல இராணுவ வீரர் ஆக வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. 

எனது பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற போட்டியின் போத்து கார்கில் போர் தொடர்பாக எழுதி பரிசும் பெற்றேன். இதனை தந்தையிடம் கூறி பாராட்டுகளையும் பெற்றேன். தந்தையும் என்னிடம் நீ பெரியவன் ஆனதும் இராணுவத்தில் சேர்த்து விடுகிறேன் என்று தெரிவித்தார். 

இராணுவத்தில் இணைந்து நாட்டினை பாதுகாப்பதே எனது இலட்சியம் என்று கூறினார். மேலும், பழனியின் மனைவி பேசுகையில், எனது கணவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. நான் ஆசிரியர் தொடர்பான படிப்பு படித்திருக்கிறேன். அரசு எனக்கு எனக்கு ஆசிரியர் பணியை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Army Officer Palani son says join Army


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->