நான் உண்மையை கூறுகிறேன்.. பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும். ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கும், ஆதரவு தெரிவிக்கும் நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக மாறியது. 

இந்த வன்முறை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையின் காரணமாக பலியான நபர்களின் எண்ணிக்கை தற்போது வரை 22 ஆக அடுத்தடுத்து உயர்ந்தது. இந்த வன்முறைக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களை போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.. டெல்லி கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. 

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் தோல்வியை காட்டுகிறது.. இதனை தற்போது சரி செய்யாவிடில் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும்.. ஊடகங்களை நான் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன், இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

அமைதி வழியில் போராட்டம் என்பது நடைபெறலாம், அமைதி வழியில் போராட்டம் வன்முறை கூடாது. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக போராடுவேன் என்று தான் சொன்னேன்.. 

இந்த சட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல், பிற மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்தால் என்னை பாஜக கட்சியை சார்ந்த நபர் என்று கூறுகிறார்கள்.. எனக்கு பின்புலமாக பாஜக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.. மக்களுக்கு எதிர்காலத்தில் கட்டாயம் இந்த சட்டம் தேவைப்படும் என்பதால் நான் ஆதரிக்கிறேன்.. 

மத்திய அரசு தெளிவான விளக்கத்தை கொடுத்த பின்னரே குடியுரிமை சட்டத்திருத்தம் போன்ற பிற சட்டத்தை அமல்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்பி அமைதியை சீர்குலைக்கின்றனர். மூத்த பத்திரிகையாளர்கள் கூட பொறுப்பில்லாமல் என் மீது தவறு உள்ளதாக கூறுகின்றனர். நான் உண்மையை கூறுகிறேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth latest press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->