ரஜினிகாந்த் ரசிகர்களையும், தமிழக மக்களையும் முட்டாள் ஆக்கிவிட்டார் - ரஜினி ரசிகர் ஆவேச பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என டிசம்பர் 29 ஆம் தேதி திட்டவட்டமாக அறிவித்த நிலையில், ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். மேலும், நேற்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற போராட்டம் தனது மனதை மேலும் பாதிக்கிறது என்று ட்விட்டரில் அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டுள்ளார். இந்த கடிதம் ரஜினியின் உண்மையான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒருதரப்பில் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்த பாலாஜி தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பேசுகையில், " ரஜினி தமிழர்களை ஏமாற்றிய தொழிலதிபர். அவர் புத்திசாலியாக இருந்து, மக்களை ஏமாற்றிவிட்டார். ரஜினி ரசிகர்கள் அவமானத்தின் சின்னமாக மாற்றப்பட்டுள்ளனர். 

மனிதாபிமானம் இல்லாத நபர்கள் கூட செய்யாத செயலை ரஜினி ரசிகர்களுக்கு செய்துள்ளார். அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என பலர் தெரிவித்த போது, அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளோம். 

ரஜினி மக்கள் மன்றம் வழியாக பல நல்லவை செய்ததற்கு, அவர் ஆன்மிகம் என்ற பெயரில் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பிட் பாக்கெட் அடிக்கும் நபரை போல அவர் செயல்பட்டுள்ளார் " என்று தெரிவித்தார். 

மேலும், அரசியலுக்கு வருகை இல்லை என்ற அறிவிக்கை வெளியாகையிலேயே இனியொரு பெரும் நஷ்டம் அல்லது இழப்பீடு எனக்கு ஏற்பட்டால், அதன் தாக்கம் எனக்காக வந்தவர்களை பாதிக்கும் என்று கூறி ரஜினி தெளிவுபடுத்தியிருந்த நிலையில், ரஜினி ரசிகர் பாலாஜியின் பேச்சு பெரும் அதிர்ச்சியை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Fan Balaji Angry with Rajinikanth Politics Decision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->