எனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த., வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.!! ரஜினியின் அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்திய மற்றும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்., உலகளவில் தனக்கென தனி ரசிகர் படையை வைத்து கொண்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை., ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கிய இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் இன்று பிப்ரவரி 11-ஆம் தேதி  நடைபெற்றது.

சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் எனும் நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது. திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும் சினிமாத்துறையில் இருந்து நடிகர் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், வைரமுத்து, அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ் மற்றும் நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்., சவுந்தர்யாவிற்கும் - விகாசனுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு., திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில் தனது மகளின் திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.  
 

English Summary

rajini thanks to his daughters marriage persons


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal