கட்சிக்கு ஒரு தலைமை.. ஆட்சிக்கு ஒரு தலைமை.. ரஜினி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

ரஜினி கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து ரஜினி தேர்தலை சந்திப்பர் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரஜினி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.  கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்களை கட்சியில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை கட்சி தலைமை தூக்கி எறியும், கட்சி பதவிகளை தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். தேர்தல் முடிந்ததும் அத்தியாவசியமான கட்சி பதவிகள் மட்டுமே இருக்கும் என்பது நிலைப்பாடு ஆகும்.

நான் முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது- என் ரத்தத்திலேயே இல்லை. கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம். 60% சதவீதம் 50 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.

30-40% அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். 50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும். திமுக, அதிமுகவில் பூத் கமிட்டி தவிர 60,000 கட்சி பதவிகள் இருக்கின்றன; தேர்தல் நேரத்தில்தான் இவர்கள் தேவை என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini press meet today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->