சிக்கலில் சிக்கிய ரஜினி.. சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான மலரை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர்.  

இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என  கூறினார். மேலும், ரஜினிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் வழக்கு தொடர்ந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரஜினி மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  காவல்துறைக்கு சென்னை 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini periyar issue case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->