கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கையை பிரச்சாரமாக மேற்கொள்ளும் வேலூர் ரஜினி மக்கள் மன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று (27/03/2021) ஒரேநாளில் 2,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்க, தமிழக சுகாதாரத்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரமும் களைகட்டி நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்குகளை சேகரிப்பதில் தீவிரம் காண்பித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சோளிங்கர், வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு உட்பட பல பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், வெளியே செல்கையில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அவரது சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் பல ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தாலும், அவரின் உண்மையான ரசிகர்கள் ஒருவர் இருக்கும் வரை, அவருக்கு பெருமையை தேடி தருவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini Makkal Mandram Supporters Make Awareness about Corona Virus and Vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->