ராம்கோ குழும நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால 6 விடுமுறை நாட்களுக்கு முழு சம்பளம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வந்த இரண்டாவது அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், முதற்கட்டமாக மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வர ஊரடங்கு அவசியம் என பலதரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, இந்த தளர்வில்லா முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தளர்வில்லா ஊரடங்கில் சில வகை பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் ராம்கோ குழுமத்திற்கு சொந்தமான நூற்பாலைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நூற்பாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு முழுசம்பளம் வழங்குவதாக ராம்கோ குழுமம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ராம்கோ குழும தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா ராம்கோ குழும பணியாளர்களுக்கு 6 நாட்கள் ஊரடங்கு காலத்திற்கான முழு சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அந்நிறுவன பணியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இராஜபாளையம் மில் தொழிலாளர்கள் சங்கமான AITUC சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam Ramco Textile Division Announce Lockdown Leave Full Salary 1 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->