3 மணி நேரத்தில் முடிய வேண்டியது 9 மணி நேரம் கதறிய மக்கள் - தமிழக ரயில் போக்குவரத்தில் நேரிட்ட திடீர் சிக்கல்..? - Seithipunal
Seithipunal


கேட் கீப்பர் பிரச்சனையால் திருவாரூர் – காரைக்குடி ரயில் தொடர்ந்துஇயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் –காரைக்குடி இடையிலான 148 கி.மீ., தூர மீட்டர் கேஜ் ரயில்பாதை, கடந்த 2012 ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் துவங்கப்பட்டு, 7 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள், கடந்த மார்ச் மாதம்30 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுசோதனை ஓட்டம் நடத்தப்பட்டன.

பின்னர் முதற்கட்டமாக பட்டுக் காோட்டை– காரைக்குடி இடையில் ரயில் சேவை தொடரப்பட்டன. இருப்பினும் பயண நேரம் என்பது 6 மணி நேரமாக இருந்ததால், பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லை.

இதனால் ரயில்சேவை நிறுத்தப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி மீண்டும் திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை வரும் ஆக்ஸ்ட் 30ம்தேதி டெமு ரயில் இயக்கப்படும் எனரயில்வே நிர்வாகம் அறிவித்து.

ரயிலைகடந்த 1 ஆம் தேதி திருவாரூரில் காலை8.30 மணிக்கு இயக்கியது. இந்த ரயில்2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என கூறப்பட்ட நிலையில், மாலை5.45 மணிக்கு சென்றடைந்தது.

இதனால் மறுமார்க்கமாக இயக்கப்படும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

இதுகுறித்து  ரயில் பயனாளிகள் சங்கத்தினர் கூறியதாவது,

பொதுவாக திருவாரூர்– காரைக்குடியிலான பயண தூரம் 3.45 மணி நேரம் தான்.ஆனால் டெமு ரயிலில் மட்டும் 6.30 மணிநேரம். இதற்கு முக்கிய காரணம், கேட்கீப்பர் பிரச்சனை தான். திருவாரூர்– காரைக்குடி இடையில் 74 கிராசிங் உள்ளது.

இதற்கு கேட் கீப்பர்களை நியமனம் செய்யாமல், ரயிலிருந்து தொழிலாளர்கள் இறங்கி,ஏறி கேட் மூடி,திறந்து மீண்டும் ரயிலை இயக்குவதால் தான் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு தாமதமாக ரயில் சென்றதால், மறு மார்க்கத்தில் ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, ரயில்வே நிர்வாகம் அதை ரத்து செய்து அறிவித்து விடுகிறது.

இது தொடர்பாக ரயிலை இயக்குவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். உடனே ரயில்வே தேர்வு மூலம் ஆள்களை தேர்வு செய்த 650 பேருக்கு பணி ஆணை வழங்கி ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rail transport affected southern tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->