பிரபல கிரிக்கெட் வீரர் வாக்களிக்க தடை!! தேர்தல் ஆணையம் கூறிய காரணத்தால் அதிர்ச்சி!!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கென்று கிரிக்கெட் உலகில் தனி பெயருண்டு. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது இந்திரா நகர் என்னும் பகுதியில் வசித்து வந்தார்.

அதன் பின்னர், அங்கிருந்து சாந்தி நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். ஒருவர் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்று வசித்து வந்தால் அந்த இடத்தின் முகவரியை தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட வேண்டும் என்பது வழக்கம். ஆனால், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இதனை செய்யவில்லை.

எனவே இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ராகுலிடம், இதுகுறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளனர். ஆனால், அவர் வெளிநாடு சென்று இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது ராகுல் ஸ்பெயின் நாட்டில் இருந்துள்ளார்.

அவர் வாக்களிப்பதற்காக கர்நாடகம் வர ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

English Summary

ragul dravid vote may ban in 2019election


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal