ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு... தர்மபுரியில் நேரடி கொள்முதல் இன்று ஆரம்பம்... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோதனை அடிப்படையில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் 2 கிலோ கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மாதாந்திர தேவைக்காக 440 மெட்ரிக் டன் அளவிற்கு கேழ்வரகானது (ராகி) சிறு, குறு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் அரூர் வட்டம், பென்னாகரம் வட்டம், தர்மபுரி வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.

இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும் மாலை 2:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் செயல்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தில் சாகுபடி செய்த கேழ்வரகை சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் உரிய சிட்டா, அடங்கல் பெற்று வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் அட்டை ஆகியவற்றின் நகலை சமர்ப்பித்து கேழ்வரகை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் கொண்டு வரும் கேழ்வரகில் கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்துக் கொண்டு வர வேண்டும். மேலும் தமிழக அரசு நிர்ணயித்த கேழ்வரகு கொள்முதல் விலையான குவிண்டாலுக்கு ரூபாய் 3578 என்ற அடிப்படை விலையில் தங்கள் வங்கி கணக்கில் நேரடி பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு செலுத்தப்படும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragi procurement for ration shops begins today in dharmapuri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->