சுர்ஜித்தை மீட்பதில் பொது மக்களால் ஏற்படும் சிக்கல்.!  மீட்பு குழுவினர் வேதனை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மணப்பாறையில் இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 60 மணி நேரமாக தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குழந்தை சுர்ஜித் மீட்கப்படுவதை நேரில் பார்க்க கண்காணித்து இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வரும் வருவாய் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்துள்ளார். இதையயடுத்து தமிழக காவல்துறை, தீயணைப்புத் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் சார்ந்தவர்களும்  தன்னார்வத்துடன் வந்து குழந்தையை மீட்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். 

ஆழ்துளை கிணற்று  மீட்புப் பணிகளில் மிகவும் திறமை வாய்ந்த தமிழாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களான மதுரை மணிகண்டன், நாமக்கல் டேனியல், கோவை ஸ்ரீதர், நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ், புதுக்கோட்டை வீரமணி மற்றும் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடி வருகின்றனர். இதன் காரணமாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் மீட்புப் குழுவினருக்கு இடையூறாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் மீட்பு பணிக்கு தேவையான இடைக்கால எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் வேன்கள் வந்து செல்வதிலும் தடை ஏற்படுகிறது. 

எனவே பொதுமக்கள் குழந்தை மீட்பதில் தொடர்ந்து பிரார்த்தனை மட்டும் மேற்கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வேகமாகவும் மிகுந்த கவனத்துடனும் இந்த மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதிநவீன எந்திரம் கொண்டு ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் மற்றொரு கிணறு தோண்டுவதில் சற்றே தாமதமானது. இது விரைவில் சரிசெய்யப்பட்டு ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நிறைவடைந்து சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன்  .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radhakrishnan ias press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->