ரவீந்திரநாத் குமார் சொன்னது அவரோட தனிப்பட்ட கருத்து..! அமைச்சர் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்து முன்னணி இயக்கம் நடத்திய விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற, அதிமுக எம்.பி.யும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், “முதலில் நாம் எல்லாம் இந்து; அப்புறம்தான் எல்லாம்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், “மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல், அதனால்தான் முதல்வரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்கிறார். முதலீடுகளை ஈர்த்து வந்தால் விழா எடுப்பேன் என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். விரைவில் அவர் விழா எடுப்பார், எங்களை அழைப்பார். அவர் சொன்னதிலிருந்து பின்வாங்கக் கூடாது.

பக்குவப்பட்ட அரசியல்வாதியாக இருந்தால் முதலீடுகள் வந்தால் மகிழ்ச்சி என்று அவர் கூறியிருக்க வேண்டும்.  பொருளாதார மந்தநிலையை சீராக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் இல்லை.

திகார் ஜெயிலுக்கு சென்று தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர் திமுகவும், காங்கிரசும். அதிமுகவை பொறுத்தவரை ஜாதி, மதம் பாகுபாடு பார்க்காத கட்சி. ரவீந்திரநாத் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rabindranath Kumar said it was his personal opinion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->