எங்க பகுதியில் அவர்களுக்கு வீட்டுமனையா? சாலை மறியல்., இரு சமுதாய மக்களிடையே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தங்கள் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது என்று, மற்றொரு பிரிவை சேர்ந்த மொத்த கிராம மக்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியது, திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ராஜா நகரம் மோட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்குப் பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் கிழக்கு பகுதியில் ராஜா கிராமம் அருகே இலவச பட்டா இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்று, பட்டியலின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திருத்தணி ஆர்டிஓ அவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சென்று உள்ளார். அவர் சென்றபிறகு பட்டினத்தை மக்கள் உடனே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி உள்ளனர்.

இதனால் மற்றொரு பிரிவை சேர்ந்த மக்கள், ராஜா கிராமம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்க கூடாது என்று போராட்டத்தில் குதித்தனர். மாநில நெடுஞ்சாலையில் கொட்டகை அமைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் திருத்தணி ஆர்டிஓ சத்யா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பட்டியலினத்தவர்களுக்கு எங்கள் பகுதியில் வீடு கட்ட நிலம் ஒதுக்கினால், இரு சமுதாய மக்கள் இடையே அடிக்கடி தகராறு, பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். கிராம மக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 4 மணி நேரம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

r k pettei people protest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->