கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


ஆர்.பாலச்சந்திரன்:

கவிஞர் பாலா என அழைக்கப்படும் ஆர்.பாலச்சந்திரன் 1946ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். 

இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் சாகித்ய அகாடமியின் நிர்வாக்குழு உறுப்பினராக இருந்தார். 

சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு இவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும்.

கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவர் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.

வில்லெம் வீன்:

வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் 1864ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பிரஷ்யாவில் பிறந்தார்.

இவர் வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

r balachandran birthday 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->