விவசாயிகளைக் கோமாளிகளாக நினைத்த, இந்த அரசு, விவசாயக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? கொந்தளிப்பில் தமிழக விவசாயிகள்…! - Seithipunal
Seithipunal


 

இன்று பாராளுமன்றத்தில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அந்த பட்ஜெட்டில், மக்களைக் கவர்வதற்காக, ஏராளமான சலுகைகளை வழங்கி அறிவித்துள்ளது, மத்திய அரசு.

இந்த பட்ஜெட், விவசாயிகளின் கடனுக்கு எந்த வித சலுகையும் அளிக்கவில்லை, என்ற விமர்சனமும் தமிழக விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

இந்த பட்ஜெட் குறித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்கப் பட்டது. அப்போது,

“டெல்லியில், தமிழக விவசாயிகள், மாதக் கணக்கில், சாலை ஓரங்களில், அமர்ந்து, விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல விதமான போராட்டங்களை அற வழியில் நடத்தினார்கள். அவர்களை எல்லாம் சந்திக்கக் கூட நேரம் இல்லாத பிரதமர் மோடி, வெளி நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்தார்.

தன்னைச் சந்திப்பதற்காக, மாதக் கணக்கில் காத்திருந்த விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க விரும்பாத, மோடி, அவர்களை, சாலை ஓரம் வித்தை காட்டுபவர்களாகத் தான்  நினைத்தார்.

தற்போது, தேர்தல் நெருங்குவதால், தான் விவசாயிகளின் நண்பன் என்று நடிக்கிறார். உண்மையில் அவருக்கு விவசாயிகளிடம் அக்கரை இருந்தால், விவசாயக் கடனை முற்றிலும் தள்ளுபடி செய்திருப்பார்.

இன்னும் பல விவசாயிகள், கடன் தொல்லையால் சாவைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தடுக்காத இந்த அரசு, மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறது, என்று விமர்சனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Questioned about agriculture loan, in the budget


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->