புதுக்கோட்டை பெண் மயமான வழக்கில் திடீர் திருப்பம்.! கைதான கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்... பேரதிர்ச்சியில் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் அருகேயுள்ள விளானூர் கிராமத்தை சார்ந்தவர் பாலகண்ணன். இவர் அங்குள்ள ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதியன்று., தனது தாயார் பஞ்சவர்ணம் (வயது 47)., இவர் ஆவுடையார்கோவில் பகுதியில் செய்யப்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரூ.3 இலட்சம் பணம் வாங்கியுள்ளார். 

இந்த நிலையில்., பணத்தை வாங்கிவிட்டு தோழியை சந்திக்க சென்ற நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. நானும் பல இடங்களில் தேடிவிட்டேன். எனது தாயாரை காணவில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., காவல் துறையினர் பஞ்சவர்ணத்தின் அலைபேசி எண்ணை அறிந்து கொண்டு., அவரின் அலைபேசியை சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில்., பஞ்சவர்ணம் கரூர் மாவட்டத்தில் உள்ள குமுளூர் பகுதியை சார்ந்த காளிமுத்து என்பவருக்கு அதிகளவில் அலைபேசியில் பேசியது தெரியவந்துள்ளது. 

died, suicide attempt, killed, murder, rapped, பாலியல் வன்கொடுமை,

இதனையடுத்து காளிமுத்துவை கைது செய்த காவல் துறையினர்., காளிமுத்துவிடம் மேற்கொண்ட விசாரணையில்., தனது கூட்டாளியான சிவகுமார் என்பவனுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணையில்., சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்குகீழ்குடி பாலத்திற்கு அருகே இருக்கும் பகுதியில் சடலத்தை புதைத்தாக கூறியுள்ளனர். 

இந்த விசாரணையில்., காவல் துறையினருக்கு அடுத்த அதிர்ச்சியாக கடந்த 2018 ஆம் வருடம் குமுளூர் பகுதியை சார்ந்த கனகாம்பாள் என்பவரையும் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் இது குறித்த தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது போன்று பிற பெண்களையும் கொலை செய்துள்ளனரா? என்ற விசாரணையிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai girl murder in karur police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->