மது படுத்தும்பாடு || பெற்ற தாயை எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள்., சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி.! - Seithipunal
Seithipunal


மதுகுடிக்க செலவுக்கு பணம் தர மறுத்ததால், பெற்ற தாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகிலுள்ள மருதான்தலை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், இவரது மனைவி லீலாவதி. மகன் சந்தோஷ் குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு குடிபோதையில் சந்தோஷ் குமார், தன் தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் போதை தலைக்கேறிய மகன் சந்தோஷ் குமார், தன் தாய் என்றும் பாராமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

இதில், தாய் லீலாவதி உடல் முழுவதும் கருகி துடிதுடித்து இறந்தார். இதனால் மகன் சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கானது புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், ஒரு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் 2 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை என்பது 40 வருடங்களுக்கு குறையாமல் சிறையில் வைக்க வேண்டும் என்றும், எந்தவித தண்டனைக் குறைப்பும் செய்யக்கூடாது என்றும், நீதிபதி அப்துல் காதர் உத்தவு பிறப்பித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukotai Santhosh gaze judgement


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->