கள்ளக்காதல் வயப்பட்டவர் மாயமான வழக்கில் திருப்பம்.. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்.. 2 வருடங்களுக்கு பின்னர் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பொன்னையம்பட்டி கிராமத்தை சார்ந்தவர் கொஞ்சி அடைக்கான (வயது 40). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கடந்த 1999 ஆம் வருடத்தில் இருந்து பணியாற்றி வந்துள்ளார். இதன்பின்னர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்த நிலையில், இவரது உறவினரான புதுக்கோட்டையை சார்ந்த மற்றொரு கொஞ்சி அடைக்கான் (வயது 50) மற்றும் அவரது மனைவி சித்ரா (வயது 47) ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது, சித்ராவிற்கும் - கொஞ்சி அடைக்கானுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உண்மையான கணவன் கொஞ்சி அடைக்கானுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்ராவிடம் இருந்து பிரிந்த கொஞ்சி அடைக்கான் புதுக்கோட்டைக்கே சென்றுள்ளார். 

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியிருந்த கொஞ்சி அடைக்கானுக்கு, அவரது பெற்றோர் புதுக்கோட்டை பகுதியை சார்ந்த பழனியம்மாள் (வயது 34) என்ற பெண்மணியுடன் கடந்த 2015 ஆம் வருடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் தற்போது மூன்றரை வயதுடைய தனுஷியா என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வெளியே சென்ற கணவர் வரவில்லை என்று பழனியம்மாள் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தொடர் விசாரணை செய்து வந்த நிலையில், சித்ரா (வயது 47), ஏழுமலை (வயது 35), ரஞ்சித் குமார் (வயது 30), டார்ஜான் (வயது 33), விவேகானந்தன் (வயது 30) ஆகியோரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதனை வருடமாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத வழக்கில், திடீர் திருப்பமாக கொஞ்சி அடைக்கான் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

மேலும், தனியார் நிறுவன ஊழியரான கொஞ்சி அடைக்கானை கொலை செய்து இரும்பு பீப்பாயில் சிமிண்ட் கலவை கலந்து விவசாய கிணற்றில் வீசியது அம்பலமானது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விவசாய கிணற்றில் இருந்த நீரினை வெளியேற்றி பீப்பாயில் இருந்த உடலை மீது பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Native Person Murdered due to Affair in Sriperumbudur Police Revokes Mystery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->