அழுதாலே.. கதறுனாலே.. விட்டீங்களா?.. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விவேக் (வயது 20). திரவரங்குளம் பகுதியை சார்ந்த பெண்மணி சாவித்ரி (வயது 19). சாவித்திரியும், விவேக்கும் கடந்த எட்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அரசு பள்ளியில் பயின்று வந்ததில் இருந்து காதலித்து வந்த நிலையில், சாவித்ரி புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். 

விவேக் மாற்று சமூக இளைஞராக இருந்த நிலையில், இவர்களின் காதலிற்கு சாவித்ரியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சாவித்ரிக்கு வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள சாவித்ரி விவேக்கிடம் திருமணம் செய்யக்கூறி கூறியுள்ளார். இதனையடுத்து விவேக் தனது நண்பர்களின் உதவியுடன் வாடகை காரில் சாவித்ரியை புதுக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நேரத்தில், குளித்தலை வாகன சோதனை காவல் துறையினர், காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட நிலையில், இருவரும் காதல் ஜோடிகள் என்பது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் விவேக்கின் வயது 20 ஆகும் நிலையில், 21 வயதாக நான்கு மாதங்கள் பாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இருவரின் பெற்றோருக்கும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரின் பெற்றோரிடமும் சமாதானம் பேசி, நான்கு மாதங்கள் கழித்து விவேக்கிற்கு சாவித்ரியை மணம்முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

சாவித்ரியை பெற்றோருடன் அழைத்து செல்ல கூறிய நிலையில், நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும், வீட்டிற்கு சென்றால் பெற்றோரால் தன்னை என்ன செய்யவும் தயங்கமாட்டார்கள் என்றும் அழுது அடம்பிடித்துள்ளார். இதனையடுத்து சாவித்ரியின் பெற்றோரிடம் சாவித்ரியை எக்காரணம் கொண்டும் அடித்து துன்புறுத்தல் போன்ற விஷயத்தில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சூழலில், இவ்விவகாரம் சாவித்ரிக்கு மனம் முடிக்க ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியவரவே, திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி சாவித்ரி இறந்துவிட்டதாகவும், அவரது உறவினர்கள் சாவித்ரியின் உடலை எரித்து, இறுதி சடங்குகளை முடித்துவிட்டதாகவும் விவேக்கிற்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சாவித்ரியின் தாய் சாந்தி, சாவித்ரியின் பெரியம்மா, மாமா, பெரியப்பா, தாய்மாமா உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பிற போராளிகள், நடுநிலைவாதிகள் இதுபோன்ற விஷயத்திற்கு மட்டும் வீரியமாக வெளியே வராமல், நாடகக்காதலால் அரங்கேறிய இளம் சிறுமிகள் மற்றும் மாணவிகளின் படுகொலைகள், காமுக கும்பலால் அரங்கேறிய பாலியல் பலாத்காரங்கள் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டல் போன்ற சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்பதே நீண்டகால எதிர்பார்ப்பு குரலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai girl suicide or murder police investigation as per his love boy complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->