அமெரிக்கா செல்ல தேர்வான புதுக்கோட்டை சிறுமி.. நினைவில் உள்ளாரா உங்களுக்கு?.. அடுத்த நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் சிதிலமடைந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வந்த சிறுமி, தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்துள்ளார். சிறுமி ஜெயலட்சுமி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த வருடத்தில் தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றியடைந்த சிறுமி ஜெயலட்சுமி, அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு செல்ல தேர்வாகினார். சுமார் 4 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில், ஒரேயொரு பெண்மணியாக தேர்வாகிய நிலையில், அமெரிக்கா செல்ல பண உதவியும் கேட்டிருந்தார். 

இதனையடுத்து மாணவிக்கு மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்த நிலையில், தனக்கு தேவையான உதவி கிடைத்ததும் மாணவி பெரும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகினர். இதன்பின்னர் தனது கிராமத்தில் கழிவறை வசதி செய்து கொடுக்க கூறி கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தொண்டு நிறுவனம் 126 வீடுகளுக்கு கழிவறை வசதியை செய்து கொடுத்துள்ளது. இதனால் அக்கிராம பெண்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai girl Select Nasa Jeyalatsumi Make toilet for Whole Village


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->