முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வந்தது டும்.. டும்.. டும்... புதுக்கோட்டையில் ஷாக்.. சத்துணவு முட்டை சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், சத்துணவு சாப்பிட்டு வந்த மாணாக்கர்களின் நலன் கருதி மாதம் 10 முட்டை, அரிசி, பருப்பு உட்பட தொகுப்பு பொருட்கள் மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

சத்துணவு முட்டைகளை வாங்கி நாம் சிறுவயதில் சாப்பிடுகையில், அதில் உள்ள மஞ்சள் கருவில் கருமை நிறத்தில் புள்ளி இருந்தால், அது கோழிக்குஞ்சின் கண்கள் என்றும், முட்டையில் இருந்து கோழி வந்தால் எப்படி இருக்கும் எனவும் நமது கற்பனை எண்ணங்களை நண்பர்களுடன் பகிர்ந்து குதூகலித்து இருப்போம். 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, 10 முட்டைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முட்டையை வீட்டிற்கு கொண்டு சென்ற மாணவர் ஒருவர் அவித்து சாப்பிட முயற்சிக்கையில், கோழிக்குஞ்சு ஒன்று உயிரிழந்து இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 

மேலும், உணவு பாதுகாப்புத்துறைக்கும் விஷயத்தை தெரியப்படுத்தவே, விசாரணையில் நாமக்கல்லை சார்ந்த ஒப்பந்ததாரர் காலாவதியான முட்டைகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பான நடைபெற்று வரும் நிலையில், அவரின் ஒப்பந்த உரிமம் இரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Aranthangi Nutrition Egg Baby Chicken Shocking News


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->