அந்த நாலு பேர் தான் காரணம்., பப்ஜி மதன் மனைவி பரபரப்பு பேட்டி.! யார் அந்த நாலு பேர்.?!  - Seithipunal
Seithipunal


அரசினால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டினை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து, அதில் விளையாடுகிறேன் என்ற பெயரில் சிறார்களிடம் ஆபாசமாக பேசி, பெண்களை இழிபடுத்தி பேசிய மதன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். இவருக்கு துணையாக இருந்த இவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.

மதனின் மீது பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்த காரணத்தினால், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதன் கைது செய்யப்பட்டது முதல், மதனிடம் பணம் கொடுத்து எமர்ந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்து குவித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் வழியாக புகார்களை அளித்துள்ளனர்.

இதற்கிடையே, மதன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. இருமுறை ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், பப்ஜி மதனின் மனைவி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தடைசெய்யப்பட்ட பஜ்ஜி விளையாட்டை மதன் விளையாடுவதாக கூறுவதே தவறு. இந்தியாவில் தடை செய்யப்பட்டது சைனா வெர்ஷன் பப்ஜி விளையாட்டு மட்டும்தான். அவர் கொரியன் வெர்ஷன் பப்ஜி விளையாண்டு கொண்டிருக்கிறார். இது இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.

மதன் மீது 150 வழக்குகள்., 200 வழக்குகள்., பதியப்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய வழக்கறிஞர்கள் மூலமாக நான் விசாரணை செய்து விட்டேன். இந்த வழக்குகள் அனைத்தையும் நான்கு பேர் மட்டுமே வேறு வேறு இடங்களில் இருந்து ஆன்லைன் மூலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். இது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. காவல்துறை தரப்பில் இருந்து யார் வழக்குப்பதிந்து உள்ளார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வரவில்லை.

மதனிடம் இரண்டு பங்களா உள்ளதாக அனைவரும் தெரிகின்றனர். அதற்கான ஆதாரத்தை என்னிடம் காட்டுங்கள். அவர் கடந்த 3 ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு அசையா சொத்தையும் வாங்கவில்லை. நாங்கள் இரண்டு சொகுசு கார்களை வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நாங்கள் எந்தவித சொகுசு கார்களையும் வாங்கவில்லை. அவர் ஆடி ஏ6 என்ற காரை மட்டுமே அவர் வைத்துள்ளார். 

அவருடைய வருமானம் பற்றி நான் தெரிவிப்பது என்ன என்றால், அவர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்து உள்ளார். 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுப்பார். எங்களுடைய யூடியூப் வலைதளத்தைப் முடக்கி வைத்துள்ளனர். என்னுடைய வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை கமிஷனர் அலுவலகம் நான் வந்ததுற்கு காரணம், மதன் மீது 200 புகார்கள் வந்துள்ளதாக சொல்கிறார்கள், அந்த 200 புகார்களை யார் யார் தெரிவித்தார்கள் என்பது குறித்த தகவலை கேட்கத்தான் வந்தேன். மேலும், அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. எந்த ஒரு சரியான வழக்கும் இல்லாமல் அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது எதற்காக என்று தெரியவில்லை. இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

மதன் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக புகார்களை தெரிவிக்கின்றனர். அவர் இதுவரை யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், 4 பேர் மட்டுமே அவர் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதற்கான ஆதாரங்கள் இல்லாமலேயே காவல்துறையில் வழக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மதன் ஆபாசமாக பேச கமெண்ட் செக்ஷனில் ஒரு சிலர் அவரை நிர்பந்தித்து பேச வைத்துள்ளனர். மேலும், அவர் வெளியிட்ட காணொளி தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. அந்த நான்கு பேர் தான் இதனை செய்து கொண்டிருக்கின்றன.ர் அந்த 4 பேர் மீது வழக்கு தொடர வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pubg madan wife press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->