மானம், மரியாதையை தொடர்ந்து ஏமாற்றி சேமித்த பணமும் போச்சு.. ஓபி மதனுக்கு ரவுண்டு கட்டும் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


யூடியூபில் டாக்சிக் மதன், மதன் ஓபி, மதன் 18 ப்ளஸ் என்ற பெயரில் சேனல் நடத்தி, அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜியை வி.பி.என் என்ற முறை மூலமாக பதிவிறக்கம் செய்து, சிறார்கள் மற்றும் சிறுமிகள் இடையே ஆபாசமாக உரையாற்றி வந்த சர்ச்சையில் சிக்கியவன் மதன். 

இவனை பெரும் புள்ளியை போல அடையப்படுத்தி அவனது சேனலுக்கு அவார்ட் கொடுத்து கவுரவம் செய்தது பிளாக் சீப் என்ற கருப்பு கூட்டம். இந்த கூட்டத்தினால் வளர்ந்து வந்த மதன், தனக்கு மட்டும் தான் வாய் இருக்கிறது என்ற எண்ணத்தில், இவனது வீட்டில் இப்படித்தான் பெண்களை கொச்சையாக பேசுவார்கள் என்பதை போல பெண்களை இழிவுபடுத்தி விமர்சனம் செய்து வந்தான்.

இந்த விஷயம் தொடர்பாக அடுத்தடுத்து எழுந்த புகாரிகளின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேலத்தில் இருந்த மதனின் மனைவி கிருத்திகாவை சென்னைக்கு அழைத்து வந்தது விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர். மேலும், மதனின் சேனலில் அவர் மதனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாற்று பெண்மணி போல பேசி ஏமாற்றி அவனது ஆபாச பேச்சுக்கு ஆதரவளிப்பது போல செயல்பட்டுள்ளார்.

இன்று தருமபுரியில் பதுங்கி இருந்த மதனை தனிப்படை காவல்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவனை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவனிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், மதனின் வங்கிக்கணக்குகள் அனைத்தும் காவல் துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேசி சம்பாரித்து, ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்று வள்ளலை போல காண்பித்து, பலரிடம் உதவி என்ற பெயரில் பணம் பறித்த வங்கிக்கணக்குகளில் உள்ள பானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUBG Madan Bank Accounts are all Controlled by Police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->