எங்க பகுதியையும் மாவட்டமாக அறிவிக்கவேண்டும்., விடாப்பிடியாக இரண்டாவது நாளாக போராடும் மக்கள்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் புதிதாக 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு புதிய மாவட்டங்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல கும்பகோணம்த்தையும் விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்க போவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் உறுதியளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அப்பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குத்தாலம் செம்பனார்கோயில் தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நேற்று முதல் அடைக்கப்பட்டுருந்த நிலையில்.

இரண்டாவது நாளான இன்று சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டார பகுதியிலும் பத்தாயிரம் கடைகள் என மயிலாடுதுறை சுற்றுவட்டாரங்களில் சுமார் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாளையும் கடையடைப்பு நடைபெரும் என போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->