போலியாக சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்கள்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த 11 உதவி பேராசிரியர்கள் பிஎச்டி படித்ததாக போலியான சான்றிதழ்களை கொடுத்ததை தமிழக கல்லூரி கல்வி இயக்ககம் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில்  இயங்காமல் உள்ள பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற்றதாக சான்றிதழ்கள் சமர்ப்பித்து இருந்தது தெரியவந்தது

 

இந்தநிலையில் போலியாக சான்றிதழ்  கொடுத்து பணியில் சேர்ந்த11 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் 

இதனைத் தொடர்ந்து தமிழக்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்குமாறு தமிழக கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 50 பேராசிரியர்களாவது பிஎச்டி படித்ததாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்திருக்கக் கூடும் என சில பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து  பணி நீக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

professors give fake certificate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->