தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அரசு பேருந்துக்கு பதிலாக தனியார் பேருந்துகள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 7 போக்குவரத்து கழகங்கள் மூலம் சுமார் 21,000 பேருந்துகளும், விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. 

தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆகையால், பேருந்துகள் இயக்கம் தடைபட்டது. இதனால் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள், அதிகாரிகளின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால், போக்குவரத்து கழகங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. தொடர்ந்து ஏற்படும் கடன் தொல்லையிலிருந்து விடுபட தமிழகத்தின் தனியார் பேருந்துகள் வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இதில், தனியாரின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவது, அவற்றின் ஓட்டுநர், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை தனியாரே மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து கழகங்கள் சார்பில் நடத்துனர் மட்டும் பணியை மேற்கொண்டு பயணச் சீட்டு வழங்குவர். பேருந்து இயக்கம் தூரம் அடிப்படையில் கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை அரசு, தனியாருக்கு வழங்கும். 

இத்திட்டம் அமலானால்,  புதிய பேருந்து வாங்குதல், பராமரித்தல் ஆகிய செலவு அரசுக்கு மிச்சமாகும். இவ்வாறு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கு அனுமதித்து உள்துறை முதன்மைச் செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private buses operating in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->