தஞ்சாவூர்: நாய்க்கு வளைகாப்பு நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதியவர்..!
Pregnant dog inaugural function in Thanjavur Dog name Abirami
வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கென தனியொரு மதிப்பு உண்டு. நாய் நன்றியுள்ள பிராணி என்பதால், நமது வீடுகளில் நாய்களை குடும்ப உறுப்பினர்களாகவே செல்லம் கொடுத்து வளர்த்து வருவார்கள். இந்நிலையில், பெற்ற பிள்ளையை போல நாய்க்கு உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 75). இவர் அங்குள்ள தஞ்சை மருத்துவக்கல்லூரி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

மகள்கள் தன்னை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனைவியும் இயற்கையை எய்தியதால் தனியாக வசித்து அந்த கிருஷ்ணமூர்த்தி, கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக டாபர்மேன் நாயை வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை இரண்டு மாத குட்டியாக பெற்ற நிலையில், தனது குழந்தை போல வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்கு அபிராமி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளார்.
அந்த நாய் தற்போது கருவுற்று இருக்கும் நிலையில், கருவுற்று 50 நாட்கள் ஆகியுள்ளது. இந்த நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து, உறவினர்கள் மூலமாக வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி, இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்திருந்த பலரும் பெண்களுக்கு வளைகாப்பு செய்வதை போல மனதார நாயை வாழ்த்திவிட்டு சென்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pregnant dog inaugural function in Thanjavur Dog name Abirami