#pray_for_Neasamani பதிவிற்கு வைகைப்புயல் வடிவேலுவின் அசத்தலான பதில்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட., இணையத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் எதிர்பாராத விதமாக ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில்., பல வெற்றிகளும் இணையத்தின் மூலமாக ட்ரெண்டிங் ஆகும் விஷயங்கள் அடைந்துள்ளது. 

என்று இணையதள பயன்பாடு நம்மிடையே வந்ததோ அன்றிலிருந்து பல நல்ல விஷயங்களுக்கும்., சில கெட்ட விஷயங்களுக்கும் இந்த இணையத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். நமது கருத்துக்களை ஆதரிப்போர் மற்றும் ஆதரிக்காதவர்கள் என்று இருபுறம் இருந்து வரும் பேச்சுக்களை கடந்து., பல கலவரங்களை ஏற்படுத்தும் பேச்சுக்களில் இருந்து நாம் இணையத்தை உபயோகம் செய்து வருகிறோம். 

கடந்த 2001 ம் வருடத்தில் நடிகர் விஜய்., சூர்யா., ரமேஷ் கண்ணா., தேவயானி., நகைச்சுவை மன்னன் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் வந்து ஏறக்குறைய சுமார் 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில்., தற்போது இந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது. 

#pray_for_Neasamani என்ற பெயரில் வைரலாகி வரும் ஹேஷ்டேக்குகளில்., காண்டிராக்டர் நேசமணியை அவரது பணியாளர் சுத்தியால் தாக்கியதால்., அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்., அவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்துவர் சிகிச்சை அளித்ததாகவும்., அவர் தற்போது நலமாக உள்ளார் என்ற புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 


இந்த பதிவுகளை கண்ட நடிகர் வடிவேலு., "நேசமணி போன்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு., ஆண்டவன் எனக்கு அளித்த பரிசாகும்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதன் மூலமாக திரைத்துறைக்கு நடிகர் வடிவேலு விடுமுறை அளித்திருந்தாலும்., அவரை ரசிக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

#pray_for_Neasamani twitter trending actor vadivel thanks to all


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->